Header Ads



எனக்கு நேரமில்லை - ஞானசாரர்

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கொலபொடத்தே ஞானசார தேரருக்கு வீசா வழங்க வேண்டாம் என முஸ்லிம் அமைப்புக்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் கடும்போக்குவாத அமைப்புக்கள் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனிடம், ஞானசார தேரரை நாட்டு;க்குள் அனுமதிக்க வேண்டாமென கடிதம் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் கடும்போக்குவாத அமைப்புக்களின் சூழ்ச்சித் திட்டமாக இதனைக் கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு எதிராக இலங்கையில் குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அளுத்கம கொலைகளுடன் அவருக்கு தொடர்பிருப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுபல சேனா ஓர் பயங்கரவாத அமைப்பு எனவும், முஸ்லிம் வர்த்தக நிலையங்களை தாக்கி அழித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பொதுபல சேனா இயக்கத்திற்கு பல நாடுகளிலிருந்து அழைப்புக்கள் கிடைக்கப்பெற்று வருவதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு மத வழிபாட்டு நிகழ்வுகளுக்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதிக வேலைப்பளு காரணமாக அனைத்த அழைப்புக்களையும் ஏற்றுக்கொள்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். gtn

6 comments:

  1. kekurawan kenayana irunda kepaila ney wadiyumam neega petrole wadiyidundragele machan gnanasara

    ReplyDelete
  2. அவரைவிடுங்கள் சற்று முளை தலம்பிவிட்டது ஏன் எனில் அவருடைய மாதத்தில் இருந்து சற்று ஒதுங்கி நோரம் என்கிறார். அல்லாஹ் என்கிரார்,அடுத்த ஜனாதிபதி என்கிறார் ஒன்றுமேபுரியலா ஞனசார ....

    ReplyDelete
  3. Eppadi neram irukum manasu uruthumilla unga neram sariyo ennamo allahvukthan velicham kavanam gnanasarare dheviyanta bayavela jeevath venna echarai kiyanna thiyanne

    ReplyDelete
  4. Neengal unmaiyana budhist aaha irunthirunthal ippadikalaverathai undufanni irukku maddeer Mr. There. Ungal matham unmai entral speak about your religion and convert to budhism .OK Mr. Gana therer

    ReplyDelete
  5. மச்சான் இதற்கு மட்டும் நேரம் இல்லையா இல்லாவிட்டால் மற்றய விடயங்களுக்கும் இருந்த இடத்திலேயா........!

    ReplyDelete
  6. அப்படி என்ன மாமு உங்களுக்கு வேலைப்பளு? கோவன்னா தாவான்னா வின் ஸ்க்ரிப்ட்டை வாசித்து அப்படியே ஆடுவதுதானே உங்கள் வேலை..? இதற்கு போய் இவ்வளவு அலப்பரையா...?

    ReplyDelete

Powered by Blogger.