Header Ads



மோசமான விளைவை சந்திக்க வேண்டிவருமென ஹமாஸ் எச்சரிக்கை

தரைவழி படையெடுப்பிற்கு இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு உத்தரவிட்டதை அடுத்து இஸ்ரேல் பீரங்கிகள் மற்றும் துருப்புகள் காசாவுக்குள் ஊடுருவியுள்ளன. ஏற்கனவே காசா மீது கடந்த 10 தினங்களால் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 250 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையிலேயே இஸ்ரேல் இராணுவம் நேற்று தரைவழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது. 

இஸ்ரேலை ஒட்டியிருக்கும் காசா எல்லைப் பகுதி மீது வியாழக்கிழமை பின்னேரம் தொடக்கம் nஜட் விமானங்கள், யுத்த விமானங்கள் மற்றும் எல்லையில் நிலைகொண்டிருக்கும் பீரங்கிகள் மூலம் இஸ்ரேல் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்கள் வடக்கு காசாவை இலக்காகக் கொண்டே இடம்பெற்றுள்ளன. 

காசாவின் பெரும்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதோடு, அதற்கான காரணம் குறித்து உறுதிசெய்யப்படவில்லை. 

இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் ஒருவரான லுதினன் கொலனல் பீட்டர் லெர்னர், “இராணுவ செயற்பாடுகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார். 

“ஹமாஸ் மீதான தாக்குதல் ஒரு தீவிரவாத குழு மீதான நடவடிக்கையாகும். அது சர்வதேச அளவில் தீவிரவாதியாக முத்திரை இடப்பட்டதாகும். எனவே அவர்களின் இஸ்ரேலுக்கு எதிரான ஆக்கிரமிப்பை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. இரண்டாவது அனைத்து தாக்குதல்களும் தீவிரவாதிகளின் கட்டமைப்புகள், ரொக்கெட் தளங்கள், அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து மாத்திரமே இஸ்ரேல் நடத்துகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார். 

எனினும் இந்த தரைவழி நடவடிக்கை முட்டாள்தனமானது என்று விபரித்திருக்கும் ஹமாஸ் பேச்சாளர் பௌஸி பர்ஹ{ம், இஸ்ரேல் இராணுவம் பாரிய விலை கொடுக்கவேண்டி வரும் என்று எச்சரித்தார்.

காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த மற்றொரு பேச்சாளரான சமி அபு+ சுஹ்ரி குறிப்பிடும்போது, "இதன்மூலம் ஹமாஸ் தலைவர்களையோ பலஸ்தீன மக்களையோ பயமுறுத்த முடியாது. இவ்வாறான முட்டாள்தனமான செயற்பாட்டால் ஆபத்தான விளைவை சந்திக்க வேண்டி வரும் என்பதை நெதன்யாகுவுக்கு நாம் எச்சரிக்கிறோம்" என்றார்.

இஸ்ரேல்-பலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தையின்போது சட்ட ஆலோசகராக இருந்த டயானா பட்டு குறிப்பிடும்போது, "இஸ்ரேல் மீது யுத்த குற்றச்சாட்டு சுமத்த பலஸ்தீன நிர்வாகம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கைச்சாத்திட வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நடப்பது இது முதல் முறையல்ல. அவர்கள் (இஸ்ரேல்) சட்டத்திற்கு மேல் இருப்பவர்கள் போன்றும் பலஸ்தீனர்கள் கீழ் இருப்பவர்கள் போன்றும் நடந்துகொள்கிறார்கள்" என்றார். 

இஸ்ரேல் மேலும் 18,000 துணைப்படையினரை அவசர இராணுவ சேவைக்கு கடந்த வியாழக்கிழமை மாலை அழைத்தது. இதன்மூலம் கடந்த ஜ{லை 8 ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேல் அழைத்திருக்கும் துணைப்படையினரின் எண்ணிக்கை 65,000 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த தரைவழி நடவடிக்கை தோல்வியிலேயே முடியும் என்று ஹமாஸ் தலைவர் காலித் மி'hல் குறிப்பிட்டுள்ளார். “ஆக்கிரமிப்பாளர்களான இஸ்ரேல் வான் மற்றும் கடல் வழி தாக்குதல்களில் தோல்வியடைந்தது போலவே தரைவழி தாக்குதலிலும் தோல்வியையே சந்திப்பார்கள்" என்றார்.

இந்த தரைவழித்தாக்குதல் மேலும் இரத்தத்தையே சிந்தச் செய்யும் என்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் குறிப்பிட்டார். இஸ்ரேல் உடனடியாக இதனை நிறுத்த வேண்டும் என்றும் அவர் அழுத்தம் கொடுத்தார். 

பத்தா கட்சியைச் சேர்ந்த அப்பாஸ் அண்மையில் ஹமாஸ{டன் இணைந்து பலஸ்தீனில்; ஐக்கிய அரசொன்றை அமைத்தார். தற்போது கெய்ரோவில் இருக்கும் அவர் எகிப்து அதிகாரிகளுடன் சேர்ந்து யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த முயன்று வருகிறார். 

இந்நிலையில் இஸ்ரேல் துருப்புகள் காசா கடற்கரை பகுதியில் காணக்கிடைப்பதாக காசாவில் இருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. தரைவழி தாக்குதல் ஆரம்பிப்பதற்கு முன்னரே ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டதாக காசாவில் இருக்கும் பிபிசி செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

காசா மீது இஸ்ரேல் நேற்று தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் ஐந்து மாத குழந்தை உட்பட 11 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

வட மேற்கு எல்லைப் பகுதி ஊடாக மேலும் 10 பீரங்கிகள் காசாவுக்குள் ஊடுருவியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இஸ்ரேலுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ள சுரங்கப்பாதைகளை அழிப்பதே தரைவழி படையெடுப்பின் பிரதான இலக்காகும் என்று இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கடந்த புதன்கிழமை 13 பலஸ்தீன ஆயுததாரிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கிப்புட் பகுதியில் தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும் அது முறியடிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டிருந்தது.

காசாவை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் கடந்த 2005 ஆம் ஆண்டு அங்கிருந்து தமது துருப்புகளை அகற்றிக் கொண்டது. பின்னர் 2009 ஆம் ஆண்டு இஸ்ரேல் நடத்திய தரைவழி தாக்குதலில் காசாவில் பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டது. 

இதனிடையே ஐ.நா.வின் கோரிக்கைக்கு அமைய கடந்த வியாழக்கிழமை இஸ்ரேல்-காசாவுக்கு இடையில் ஐந்து மணிநேர மனிதாபிமான அடிப்படையிலான யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த யுத்த நிறுத்த காலம் முடிவடைந்த உடனேயே இஸ்ரேல் தனது வான் தாக்குதல்களை ஆரம்பித்தது. இந்த தாக்குதல்களில் மேலும் 10க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 

இதன்மூலம் கடந்த இரு வாரமாக நீடிக்கும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 258ஆக உயர்ந்துள்ளதோடு குறைந்தது 1,770 பேர் காயமடைந்தனர். இதில் கிழக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய n'ல் தாக்குதலில் 4 மற்றும் 15 வயது சிறுவர்களுடன் மூவர் கொல்லப்பட்டனர். தவிர காசா நகரில் சப்ரா என்பவரின் குடும்பத்தினரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். 

இந்த மூன்று சிறுவர்களும் தமது வீட்டின் மேற்கூரைப் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோதே இஸ்ரேல் யுத்த விமானம் அவர்கள் மீது குண்டு போட்டு சென்றுள்ளது. இதில் 10 வயதுக்கு உட்பட்ட சகோதரர்கள் மற்றும் அவர்களது மைத்துனருமே பலியாகியுள்ளனர். 

இந்த சிறுவர்கள் தற்காலிக யுத்த நிறுத்த காலத்தை பயன்படுத்தியே விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். “அவர்கள் வீட்டின் கூரையில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்" என்று தனது வெள்ளை ஆடையில் இரத்தம் தோய்ந்த நிலையில் அயல் வீட்டாரான 33 வயது ரயெத் அல் குர்தி விபரித்துள்ளார். “இதன்போது நாம் எமது மேற்கூரை பகுதியில் அமர்ந்திருந்தோம். 

திடீரென எமக்கு மேலால் ஒரு ரொக்கெட் ஒன்று வந்து அவர்களது வீட்டின் மீது தாக்கியது. எமது கைகளால் அந்த குழந்தைகளை ஏந்திச் செல்லும்போது அவர்கள் மோசமான நிலையில் இருந்தனர்" என்று குறிப்பிட்டார்.

இந்த மூன்று சிறுவர்களும் 'pபா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிர் நீத்துள்ளனர். 

இந்த சிறுவர்களது உடலெங்கும் நாணய குற்றி அளவுகளில் குண்டடிக் காயங்கள் இருந்துள்ளன. 

தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஐந்து மாத குழந்தை உட்பட ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

காசா மீதான ஆக்கிரமிப்பு காரணமாக 22,900 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் ஐ.நாவிடம் தஞ்சம் புகுந்திருப்பதாக மனிதாபிமான உதவிகளுக்கான ஐ.நா. அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் காசாவுக்கு அவசர உணவு உதவிகள் தேவைப்படுவதாக ஐ.நா. அறிவித்துள்ளது. காசாவில் 1,780 குடும்பங்களின் (மொத்தம் 10,600 பேர்) வீடுகள் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. கணித்துள்ளது. 

கடந்த ஜ{ன் 8 ஆம் திகதி தொடக்கம் காசா மீது 1,960க்கும் அதிகமான தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று காசாவில் இருந்து இஸ்ரேல் மீது சுமார் 1,380 ரொக்கெட்டுகள் ஏவப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது. 

இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதலில் ஒரு இஸ்ரேலியர் மாத்திரமே கொல்லப்பட்டதோடு பத்துக்கும் குறைவானவர்களே காயமடைந்துள்ளனர். எனினும் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள் என ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மோதலை முடிவுக்கு கொண்டுவர ஹமாஸ், காசா மீதான முற்றுகையை நிறுத்தவும், 2011 ஆம் ஆண்டு உடன்படிக்கையில் விடுவிக்கப்பட்டு பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கும் பலஸ்தீனர்களை விடுவிக்கவும் நிபந்தனைகளை விதித்திருந்தது. எனினும் இந்த நிபந்தனைகள் இஸ்ரேலில் அரசியல் ரீதியில் கடினமானது என்று கருதப்படுகிறது.

மோதலை முடிவுக்கு கொண்டுவர எகிப்து தலைநகர் கெய்ரோவில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஹமாஸ் பேச்சாளர் சமி அபு+ சுஹ்ரி நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தார். 

அத்துடன் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள எந்த ஹமாஸ் தலைவரும் கெய்ரோ செல்லவில்லை என்றும் அவர் நிராகரித்துள்ளார். எனினும் ஹமாஸ் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான மூஸா அபு+ மர்சூக் எகிப்து மத்தியஸ்தர்களை சந்தித்துள்ளார். ஆனால் அவர் நீண்ட காலமாக கெய்ரோவில் வாழ்ந்து வருபவராவார். 

கெய்ரோவில் இருக்கும் பத்தா அமைப்பின் பிரதிநிதியான அஸ்ஸாம் அல் அஹமத்தும், பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்தார். இஸ்ரேல் தூதுக்குழுவும் கெய்ரோவில் தங்கி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.