Header Ads



சிரியாவின் எரிவாயு தளம் ஐசிஸ் கிளர்ச்சியாளர் வசம்

ஐசிஸ் என அழைக்கப்படும் ஈராக் இஸ்லாமிய தேசம் போராளிகள் சிரியாவின் மத்திய மாகாணமான ஹோம்ஸ், பாலைவனப் பகுதியில் இருக்கும் எரிவாயு உற்பத்தி நிலையத்தை கைப்பற்றியுள்ளனர். 

பண்டைய நகரான பல்மிராவில் இருக்கும் n'ர் எரிவாயு உற்பத்தி நிலையம் மீது போராளிகள் கடந்த வியாழக்கிழமை காலை தாக்குதல் நடத்தினர். இதன்போது அங்கு இருந்த பாதுகாவலர்கள் 23 பேர் கொல்லப்பட்டனர் என்று சிரியா தொடர்பில் கண்காணிக்கும் மனித உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 

"எரிவாயு தளத்தில் இருந்த 340 தேசிய பாதுகாப்பு படையினர் (துணை இராணுவம்), பாதுகாவலர்கள், பொறியியலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. இவர்கள் கைதிகளாக பிடிபட்டிருக்கலாம் அல்லது மோதலில் காயமடைந்திருக்கலாம்" என்று மேற்படி மனித உரிமை குழுவின் இயக்குனர் சமி அப்தல் ரஹ்மான் குறிப்பிட்டு ள்ளார். 

ஹோம்ஸ் மாகாணத்தில் இருக்கும் ஐசிஸ் போராளிகளுடன் தொடர்புபட்ட செயற்பாட் டாளரான அபு+ பிலாலும் இந்த தகவலை உறுதி செய்தார். "இது ஒரு உயிர்த்தியாக (தற்கோலை) தாக்குதலாகும். எரிவாயு தளத்தை கைப்பற்றும் முன் எட்டு சோதனைச் சாவடிகளை முறியடித்தோம்" என்று பிலால் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு விபரித்துள்ளார். 

சிரியா மற்றும் ஈராக்கில் தாம் கைப்பற்றிய பகுதிகளை ஒன்றிணைத்து கடந்த மாதம் தன்னிச்சையாக இஸ்லாமிய கிளாபத்தை அறிவித்த ஐசிஸ் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஒருசில வாரங்களுக்குள் சிரியாவின் எண்ணெய் வளம் கொண்ட டைர் அல் எஸ்ஸ{ர் மாகாணத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. டைர் அல் எஸ்ஸ{ர் மாகாணம் சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்திற்கும் ஈராக்கிற்கும் எல்லையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஐசிஸ் போராளிகள் ஈராக்கிலும் பெரும் நிலப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.