Header Ads



பிரபாகரன், நவநீதம்பிள்ளை, ஞானசாரருக்கிடையில் காணப்படும் ஒற்றுமை - அமைச்சர் டிலான் பெரேரா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை மற்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடவத்த ஞானசார தேரருக்கு இடையில், காணப்படும் ஒற்றுமை தொடர்பில் அமைச்சர் டிலான் பெரேரா இன்று 23-07-2014 தெளிவு படுத்தினார்.

“கறுப்பு ஜூலை” மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு தேசிய ஒற்றுமையுடன் கைகோர்த்துக் கொள்வோம் எனும் தொனிப் பொருளில் இலங்கை வெளிநாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வேலுப்பிள்ளைக்கு வேண்டியதை இன்று நவநீதம் பிள்ளை ஜெனிவாவில் இருந்து செய்ய முற்படும் போது, நவநீதம் பிள்ளைக்கு வேண்டியதை இங்கிருந்து கலகொட ஞானசார தேரர் வேறுவிதமாக செய்ய முனைவதை அவதானிக்க முடிகிறது.

இவை அனைத்தும் ஒரே செயல்பாடுகளாக காணப்படுகின்றன.

மத ஒற்றுமை இலங்கையில் இல்லை என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கடிதம் எழுதி 3 வாரங்கள் நிறைவடைவதற்கு முன்னர், கலகொடஅத்தே தேரர் முஸ்லீம் மக்களுடன் முறுகலில் ஈடுபட்டார்.

நாடாளுமன்றத்தில் ஜெனிவாவில் நவநீதம் பிள்ளை குழுவிற்கு எதிராக விவாதம் இடம்பெறவிருந்த இறுதி தருணத்திலேயே அளுத்கம அனர்த்தம் இடம்பெற்றதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.