Header Ads



இலங்கை பௌத்த தேரர்களின் செயற்பாடுகளை சர்வதேசம் அவதானிக்கிறது - அமைச்சர் சரத் அமுனுகம

சமகாலத்தில் இலங்கையில் தேரர்கள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாது பௌத்த மதத்தின் தர்மத்தை பாதுகாப்பதே தேரர்களின் கடமையென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி கலகெதற பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நாட்டு விகாரைகளில் வசிக்கும் தேரர்கள் பௌத்த தர்மத்தை பாதுகாப்பதில் மிகவும் அவதானமாக செயற்படுவதாக சரத் அமுனுகம கூறினார்.

மாலைதீவு, மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகள் முன்னர் பௌத்த நாடாகவே காணப்பட்டன. எனினும் சமகால தேரர்களின் நடவடிக்கை காரணமாக அந்நாடுகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

2 comments:

  1. அமைச்சரின் உரையின் ஆழத்தை சற்று நோக்குவோம் , முன்னா் பெளத்த நாடாக இருந்த நாடுகளில் ஏற்பட்ட தாக்கம். அந்த நாட்டு மக்கள் சரியான "ஜிகாத்தின்" அர்த்தத்தை உனா்ந்து இருந்தார்கள் இதன் முலம் அறிவது என்னவெனில் இஸ்லாம் "தீவிரவாத" மாக்கமல்ல, மாறாக இஸ்லாம் இலகுவானது.

    ReplyDelete
  2. Monk should beahave as really monk then only people will embrace Bhhdism

    ReplyDelete

Powered by Blogger.