Header Ads



ஹக்கீம், றிசாத் சந்தித்து பேச்சு - ஊவா மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க நடவடிக்கை

(சுஐப் எம். காசிம்)

ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ¤ம் மலையக முஸ்லிம் கவுன்ஸிலும் இணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. ஊவா மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே முஸ்லிம்களின் பிரதான இவ்விரு கட்சிகளும் இந்த இணக்கத்திற்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆளுங் கட்சியின் பங்காளிக் கட்சிகளாக இருக்கும், இவ்விரு கட்சிகளும் பொதுச் சின்னத்தில் இணைந்து களமிறங்குவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது. தேர்தலில் இணைந்து களமிறங்குவது குறித்து மு. கா. தலைவர் அமைச்சர் ஹக்கீமும் அ. இ. ம. காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீனும். சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன். மலையக முஸ்லிம் கவுன்ஸிலும் இவ் விரண்டு தலைவர்களையும் சந்தித்து தேர்தலில் கூட்டாக களமிங்குவது குறித்துப் பேசியுள்ளனர். அதேவேளை அமைச் சர்களான றவூப் ஹக்கீம். ரிசாத் பதியுதீன் ஆகியோர் ஊவாப் பிரதேசங்களுக்கு தனித்தனியாக சென்று கள நிலவரங்களை ஆராய்ந்து திரும்பியுள்ளனர்.

முஸ்லிம் கட்சிகள் ஒன்றாக இணைந்து செயலாற்ற வேண்டுமென்று அடிக்கடி பேசப்பட்டு வரும் இந்த காலகட்டத்தில் குறைந்தது இவ்விரு கட்சிகளும் இணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிட முன்வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக தேர்தல்களில் தனித்துப் போட்டியிடும் மு. கா. பொதுச் சின்னத்தில் போட்டியிட முன்வந்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இது தொடர்பில் மு. கா. வின் உயர் பீடத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டிய சூழல் இருக்கின்றது. வழ மையாக கட்சித் தலைவருக்கே இறுதித் தீர்மானம் எடுக்கும் முடிவை மு. கா. உயர்பீடம் வழங்குவதால் இதுவும் ஒரு பிரச்சினையாக இருக்க வாய்ப் பில்லை. 

அ. இ. ம. காங்கிரஸைப் பொறுத்தவரையில் கடந்த மேல் மாகாண சபைத் தேர்தலில் அக்கட்சி தனித்துப் போட்டியிட்டு ஓர் ஆசனத்தைப் பெற்று கொழும்பில் சரித்திரம் படைத்தது. இக்கட்சியும் அமைச்சர் ரிசாட் தலைமையில் கூடி தேர்தல் தொடர்பில் சமூகத்துக்கு பொருத் தமான முடிவுகளை மேற் கொள்ளும் எனத் தெரிவிக் கப்பட்டது. முஸ்லிம் கட்சிகள் ஒருமித்து போட்டியிட முன் வந்தால் மு. கா. வின் மரச் சின்னத்தை விடுத்து, பொதுச் சின்னத்தில் போட்டியிட தமது கட்சி தயாரென அமைச்சர் ஹக்கீமின் பகிரங்க அறிவிப்பும், கட்சியின் நலன்களைவிட சமூகத்தின் நலனே தமக்கு முக்கியம் என்ற அமைச்சர் ரிசாட் வெளிப்படையான கருத்தும், ஊவா மாகாண முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க இவ்விரு தலைவர்களும் கொண்டுள்ள இதயசுத்தியான அக்கறையையே வெளிக்காட்டி நிற்கின்றது.

எது எப்படியிருப்பினும் எதிர்வரும் 30 ஆம் திகதி தேர்தல் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும் தினம் ஆரம்பமாவதால் எதிர்வரும் 25 ஆம் திகதியளவில் இவ்விரு கட்சிகளும் தமது தீர்க்கமான முடிவுகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய கட்சிகளில் போட்டியிட உத்தேசித்துள்ள வேட் பாளர்கள் பொதுச் சின்னத்தில் போட்டியிட முன்வந்தால் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சிகளும் இடம்பெறுகின்றன.  இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டால் வேறொரு வியூகம் அமைத்து செயற்படுவதற்கான சூழ்நிலை இருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.

2 comments:

  1. நல்ல முடிவு எல்லாககட்சிகளும் ஒன்று செர்ந்து கூட்டணி அமைத்து இவ்வரசாங்கத்திற்கு ஒரு திட்டவட்டமான பாடம் கற்பிற்பதுடன் எதிர்காலத்திலும் ஆட்சிக்கு வரும் தலைவர்களும் மனதில் வைக்கவேண்டும்.
    உண்மையில் இந்த அரசு போன்ற தூரோகச்செயலின் வேற்றுத்தலைவர்களின் அரசில் ஏற்பட்டிருக்கவில்லை என்று சொல்லலாம்.

    ReplyDelete
  2. இவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் மஹிந்த மாமாவுக்குத்தன் நன்மை. முஸ்லிம்கள் அரசாங்கத்துக்கு வாக்களிக்க மாட்டர்கள் எனவே நீங்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ முஸ்லிம்களும் வாக்குகளை கொள்ளையடித்துக் கொண்டு வாருங்கள் இன்ள்ளவிட்டால் உங்களை அரசின் அமச்சுப்பதவியில் இருந்து தூகிவிடுவேன் என்று மகிந்த சொல்லியுள்ளார். அதனால் முஸ்லிம்களின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்றுவிடாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் முஸ்லிம் காங்கிரசுக்கு உள்ளது. இன்று மகிந்த rauf hakeem அவர்களை அமைச்சில் இருந்து வெளியேற்ற முதல் நீகளாக விலகிக் கொண்டால் நல்லம் என்ற வசனம் கூட உவா தேர்தலுக்கான நாடகத்தின் ஆரம்பம்தான். கந்த கால தேர்தல்களில் கூட இப்படித்தான் ஏதாவது முரன்பட்டதுபோல் கட்டுவார்கள் தேர்தல் முடிந்தவுடன் எல்லாம் மறந்து போய கூட்டாகிவிடுவர்கள். இதுதான் முஸ்லிம்களின் தலைவர்களின் நயவஞ்சகத்தனம். அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான். உவமக்கான முஸ்லிம்களே நீங்களும் எமந்துவிடதீர்கள். முதலில் கிழக்குமாகாண மக்கள் பின்னர் மேல்மக்கான மக்கள் தற்போது நீங்கள். முஸ்லிகளை மொடயர்கள் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எண்ணிக்கொண்டு இருக்கிறார். நீங்கள் அதை உண்மைப்படுத்த வேண்டாம். நம்மளைப்பதுகக்க அல்லாஹ் இருக்கின்றான். Rauf Hakeem உடைய மாயவலைக்குள் விழுந்துவிட வேண்டாம். Rauf Hakeem நயவஞ்சகள். அவனை அல்லாஹ் பார்த்துக்கொள்வான்.

    ReplyDelete

Powered by Blogger.