Header Ads



மஹிந்த ராஜபக்ஸவுக்கு, விமல் வீரவன்ச எச்சரிக்கை..!

காணாமற்போனோர் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்தி, அண்மையில் வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவித்தலினால், சிறிலங்கா அரசாங்கம் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார். 

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையிமுடுவதை அனுமதிக்கும் இந்த சிறப்பு வர்த்தமானியில் திருத்தம் செய்யுமாறு கோரி, அவர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 

“இந்த சிறப்பு வர்த்தமானி அறிவித்தலின் மூலம், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றிய மூன்று நிபுணர்கள், ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதனால், வெளிநாட்டுத் தலையீடுகள் ஏற்படும். 

ஒட்டுமொத்த அனைத்துலக நீதிமன்ற முறையே பக்கச்சார்பானது. 

ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று பேரும் சுதந்திரமானவர்கள் அல்ல. 

இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எவர் அறிவுறுத்தியிருந்தாலும், இது ஆபத்தானது. 

மூன்று அனைத்துலக நிபுணர்கள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளதால், நிறைய பிரச்சினைகள் உருவாகும். 

சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை நியாயப்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, மூன்று நிபுணர்கள் அடங்கிய குழுவை சிறிலங்கா அரசாங்கம் நியமித்தமை தகுதியில்லாத நடவடிக்கை என்று, சிறிலங்காவை ஆளும் கூட்டணியின் மற்றொரு பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் குற்றம்சாட்டியுள்ளது. 

இதுதொடர்பாக, கருத்து வெளியிட்டுள்ள,, ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான நிசாந்த சிறிவர்ணசிங்க, 

இந்தக் குழுவை நியமித்ததன் மூலம், இதுவரையிலும் கொண்டிருந்த நிலைப்பாடு, கொள்கை ஆகியவற்றை சிறிலங்கா அரசாங்கம் மீறியுள்ளது. 

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வெளியார் தலையீடுகளுக்கு இடமளிக்காது இருப்பதே அரசாங்கத்தில் நிலைப்பாடாக இருந்தது. 

இவ்வாறான விடயங்களை ஆராய்வதற்காக சட்டரீதியான மற்றும் நீதிமன்ற பொறிமுறை தம்மிடம் இருப்பதனால் வெளியாரின் தலையீடு அவசியமற்றது என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தது. 

இந்நிலையில், வெளிநாடுகளை ச்சேர்ந்த நிபுணர்களை நியமித்ததன் ஊடாக சிறிலங்கா அரசாங்கம் இதுவரையிலும் கடைப்பிடித்து வந்த கொள்கை மற்றும் நிலைப்பாட்டை மீறியுள்ளது. 

இந்த நியமனம் தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளியான எங்களுடைய கட்சிக்கு எவ்விதத்திலும் தெளிவுபடுத்தவில்லை. 

படையினருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அவற்றை ஜாதிக ஹெல உறுமய கடுமையாக எதிர்க்கும். 

அதேபோல, ஆலோசனை வழங்குவதற்காக வெளிநாட்டு நிபுணர்கள் மூவரை நியமித்தமைக்கு ஜாதிக ஹெல உறுமய தம்முடைய கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. 

ஆலோசனை வழங்குவதற்காக இந்த நிபுணர்கள் குழுவை நியமித்தமைக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Ok, படையினர் உண்மையிலேயே மனித உரிமை மீறல் குற்றங்களைச் செய்திருந்தால் .. அவர்களைத் தண்டிக்கவும் அவர்களிடமிருந்து இழப்பீடுகளும் பெற்றுத்தரவும் கூடாதா என்ன? போரில் எதிரிகளிமிருந்து பொதுமக்களையும் நாட்டையும் மீட்கத்தானே உத்தரவு..? அப்பாவி மக்களையும் பெண்கள் சிறுவர்களையும் கொல்லவும் பாலியல் வன்முறை புரியவுமா பணித்தார்கள்..? அப்படி பணிக்கப்பட்டிருந்தால், உரியவர்களைப் பற்றிய உண்மைகளைக் கூறட்டும். குற்றத்தைச் செய்தவர்களும் ஏவியவர்களும்தானே தண்டிக்கப்படப் போகின்றார்கள். குற்றமிழைக்காதவர்கள் தண்டிக்கப்படப் போவதில்லையே.. அப்படியிருக்க ஏன் இந்த விறாப்பு திரு வீரவன்ஸ அவர்களே?

    மிலேச்சர்களான குற்றவாளிகளை காப்பாற்றி அடுத்த குற்றங்களுக்கு அவர்களைத் தயார் செய்யும்படிதான் நீங்கள் கற்றுக்கொண்ட உங்கள் பௌத்த தர்மம் போதிக்கின்றதா என்ன?

    ReplyDelete
  2. Chumma comedy pannazinga Mr. Kozha wansa sorry sorry weera wansa awarhale

    ReplyDelete

Powered by Blogger.