Header Ads



நாட்டில் நில­வு­கின்ற அனைத்­து­ பிரச்­சி­னை­க்கும் ஜனா­தி­பதி முறையே கார­ண­மாகும் - சோபித தேரர்

(Vi)

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையினை இல்­லா­தொ­ழித்தால் இந்த நாட்டில் உள்ள அனைத்­து­வித பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வுகள் கிடைக்கும். முழு நாட்டு மக்­க­ளுமே எதிர்­க்கின்ற ஒரு ஆட்சிமுறை­யா­கவே நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை காணப்­ப­டு­கின்­றது. இதனை இல்­லாது செய்து ஜன­நா­ய­கத்தை ஏற்­ப­டுத்­து­வது தொடர்பில் ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்­துவேன் என்று மாதுலு­வாவே சோபித தேரர் தெரி­வித்தார்.

நேற்று கொழும்பு கோட்­டையில் அமைந்­துள்ள நாக விகா­ரையில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே­அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது இந்த நாட்­டினை பொறுத்த வரையில் ஜனா­தி­பதி முறைமை என்­பது தேவை­யற்ற ஒன்­றாகும். நாட்டில் நில­வு­கின்ற அனைத்­து­வித பிரச்­சி­னை­க­ளுக்கும் இவ் ஜனா­தி­பதி முறையே கார­ண­மாகும். எனவேஇ இதனை இல்­லா­தொ­ழித்து அதி­கார பகிர்­வினை ஏற்­ப­டுத்­து­வது காலத்தின் கட்­டா­ய­மாகும்.

ஒரு நாட்டில் அதி­காரம் என்­பது சட்டம் நீதி நிர்­வாகம் என்று மூன்று துறை­க­ளுக்­கி­டை­யேயும் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அப்­போ­துதான் ஜன­நா­யகம் நிலவும். ஆனால் எமது நாட்டை பொறுத்­த­வ­ரையில் நிறை­வேற்று துறை­யான ஜனா­தி­ப­தி­யிடம் மட்­டுமே அதி­காரம் குவிந்து மையப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஏனைய துறைகள் அதி­காரம் அற்று வெறு­மை­யாக உள்ளன. இது தொடர்பில் ஏற்­க­னவே ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தைநடத்த நேர அவ­காசம் கேட்­டி­ருந்தோம். அது நமக்கு கிடைக்­க­வில்லை. ஆனால்இ அர­சாங்கம் தடுத்­தாலும் இது தொடர்பில் ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும் என்­பதில் நான் உறு­தி­யாக உள்ளேன்.

நாட்டில் பொலிஸ்­துறை உட்­பட அனைத்­திலும் ஊழல் தலை­வி­ரித்­தா­டு­கி­றது. மரக்­கறி உட்­பட அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலை ஏற்­றத்­தினால் மக்கள் பட்­டினிச் சாவினை எதிர்­நோக்­கி­யுள்­ளனர். விவ­சா­யிகள் தற்­கொலை செய்து கொள்­ளு­கின்ற நிலை தொடர்­கி­றது. இது அனைத்­துக்கும் காரணம் அர­சாங்­கமே ஆகும்.

மகிந்த சிந்­த­னை­யென்று கூறி விமான நிலை­யங்­களை அமைப்­ப­தனால் மக்­களின் வயிற்று பசியை போக்க முடி­யாது என்­ப­தனை அர­சாங்கம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்று நாட்டில் ஜன­நா­யகம் வீழ்ச்சி கண்­டுள்­ளது. அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற அமைச்சர்­க­ளுக்கும் கூட இது தெரியும். அமைச்­சர்­க­ளான வாசு­தேவ நாண­யக்­கார, ராஜித சேனா­ரத்ன போன்­றோரும் இதனால் தான் நிறை­வேற்று அதி­கார முறைமை என்­பதில் விருப்பம் இல்லை என்­கின்­றனர். ஆனால் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற பலரும் இதனைப் பற்றி வாய்­தி­றக்க அஞ்­சு­கி­றார்கள்.

நாம் சகல எதிர்க்­கட்­சி­க­ளுடனும் இது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­துவோம். விகி­தா­சார தேர்தல் முறைமை இல்­லாமல் செய்­யப்­பட வேண்டும். 17ஆம் திருத்தம் மீண்டும் அமு­லாக்கப்­படல் வேண்டும். எமது ஆத­ரவான பொது வேட்­பாளர் ஒருவர் தேர்­தலில் வெற்றி பெறும் போது இவை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும். குறிப்­பாக சுயா­தீ­ன­மாக அனைத்து துறை­களும் இயங்கும் வகையில் அதி­கார பர­வ­லாக்­கத்தை ஏற்­ப­டுத்­துவோம். இது நடந்தால் ஏனைய அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு எளிதில் கிட்டி விடும். ஜனா­தி­பதி தேர்தல் நடத்­தப்­ப­டு­வ­தற்கு முன்னர் இந்த நிறை­வேற்று அதிகார முறைமையை இல்லாது செய்து விட்டு சுயாதீனமான தேர்தல் நடத்தப்படல் வேண்டும். அப்போது தான் இந்த நாட்டு மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. may allah give you hidayath ameen

    ReplyDelete
  2. Azatku sarfaha vakkalitha Muslim congresumthan therare azodu unga gnanasararum gotabeyumthan

    ReplyDelete

Powered by Blogger.