Header Ads



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உகண்டா பயணமானார்



ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நான்கு நாள் அதிகாரபூர்வ பயணமாக நேற்றிரவு உகண்டாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். 

இந்தப் பயணத்தின் போது உகண்டா அதிபர் யொவேரி முசெவேனியுடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ளதுடன், கொமன்வெல்த் உள்ளூராட்சி கருத்தரங்கையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். 

கம்பாலாவில் தங்கிருக்கும் போது மகிந்த ராஜபக்ச வர்த்தக கண்காட்சி ஒன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், மசுலிடா தொழிற்பயிற்சி நிலையத்தையும், 1924இல் ஆரம்பிக்கப்பட்டதும், அந்த நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிப்பதுமான உகண்டா சீனிக் கூட்டுத்தாபனத்தையும் பார்வையிடவுள்ளார். 

1972ம் ஆண்டில் உகண்டாவுடன் சிறிலங்கா இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்தது. இதன்பின்னர், உகண்டா அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். 

எனினும் சிறிலங்கா அதிபர் ஒருவர் உகண்டா செல்வது இதுவே முதல்முறையாகும். 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களின் போது, உகண்டா அவற்றுக்கு எதிராக வாக்களித்து சிறிலங்காவுக்கு ஆதரவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.