வீரஞ் செறிந்த உலக நாயகி
- Azeez Luthfullah -
ஐநா சிறப்பு அறிக்கையாளர் ஃபிரான்செஸ்கா அல்பெநீஸ் இன்று உலக நாயகியாக உலகெங்கும் ஓங்கி நிற்கின்றார்.
ஐநா அதிகாரியான ஃபிரான்சிஸ்காக இஸ்ரேல் செய்து வருகின்ற கொடூரங்களை, இனப் படுகொலையை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றார். சமீபத்தில் From Economy of Occupation to Economy of Genocide என்கிற தலைப்பில் ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் இவர் சமர்ப்பித்த அறிக்கை உலகத்தையே அதிரச் செய்தது.
மைக்ரோ சாஃப்ட், கூகுள், அமேசான், லாக்ஹீட் மார்ட்டின், கேட்டர்பில்லர் இன்க், பிளாக்ராக் உள்ளிட்ட ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் நடத்தி வருகின்ற கொடூரங்களிலிருந்து இலாபம் பார்த்திருப்பதாக புள்ளிவிவரங்களுடன் நிறுவி இருக்கின்றார் ஃபிரான்சிஸ்கா.
இராணுவம், வேளாண்மை, நிதி, தகவல் தொழில்நுட்பம், உளவு, கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த நிறுவனங்கள் இலாபம் ஈட்டியிருக்கின்றன என்பதுதான் ஃபிரான்சிஸ்காவின் ஆணித்தரமான குற்றச்சாட்டு.
யானிஸ் வராயோஃபகிஸ்(Yanis Varoufakis) தாமர் பிக்கட்டி (Thomas Piketty) போன்ற புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் ஃபிரான்சிஸ்காவின் அறிக்கையை உறுதி செய்திருக்கின்றார்கள்.
இந்த நிலையில் உலக மகா ரவுடியான அமெரிக்கா இந்த வீரஞ் செறிந்த பெண்மணி மீது தடை விதித்திருக்கின்றது.
இத்தனைக்கும் தன்னலம் பாராமல் - ஐநாவிடமிருந்து சம்பளம் கூட பெறாமல் UN pro bono official ஆக பொதுநலத்துக்காக சேவையாற்றி வருபவர்தாம் ஃபிரான்செஸ்கா.
அமெரிக்காவின் தடையை அவர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அதனை மாஃபியாத்தனமான மிரட்டலாகத்தான் பார்க்கின்றேன் என்கிறார் மாஃபியாவுக்கு பெயர் பெற்ற இத்தாலியைச் சேர்ந்த இந்தப் பெண்மணி.
அமெரிக்காவின் தடையைத் தொடர்ந்து ஒட்டுமொத்த உலகமே ஃபிரான்சிஸ்காவைக் கொண்டாடுகின்றது. தொலைக்காட்சி நேர்காணல்கள், பத்திரிகை பேட்டிகள், யூடியூபர்களுக்கு சவுண்ட் பைட் என்று உலக நாயாகியாக ஓங்கி நிற்கின்றார் அவர்.
அமெரிக்கா செய்வதறியாமல் முழி பிதுங்கி நிற்கின்றது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Post a Comment