Header Ads



தொப்பி அணிந்து தாடி வளர்த்தால் பயங்கரவாதியா..?


இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதற்காக  பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டார். நானும் இஸ்ரேலுக்கு எதிராக முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளோம்.  


தொப்பி அணிந்து தாடிவளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால், அவர்கள் அகிம்சைவாதி, இதுவே இந்த நாட்டின் நிலைமையாக காணப்படுகின்றது என சமவுரிமை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் தென்தே ஞானானந்த தேரர் தெரிவித்தார். 


பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தியும்  இன்று -12- கையெழுத்து மற்றும் துண்டுப் பிரசுரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  சமவுரிமை இயக்கம் மற்றும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆகியன இணைந்து மட்டக்களப்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தேரர் இவ்வாறு குறிப்பிட்டார் 

No comments

Powered by Blogger.