ஞானசாரர் தற்கொலைக்கு முயற்சி
நான் ஏன் ஞானசார தேரருக்கு உதவினேன்? தேசிய மக்கள் சக்தி அதாவது இந்த அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும் JVP யினர் அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து தாக்கியதையடுத்து, அவரை தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் மனநிலைக்கு தள்ளினார்கள்.
அதாவது, இவர்கள் தொடுக்கும் தாக்குதலை என்னைப் போன்றவர்களால் மட்டுமே தாங்கிக் கொள்ள முடியும். இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
ஏனெனில் இவர்கள் தர்மத்தின் வழியில் மனதைப் பக்குவப்படுத்தவில்லை. உங்களுக்குத் தேவை என்றால், அவருக்குத் தொடுக்கும் தாக்குதல்களை என் மீது தொடுங்கள்.
எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவரைத் தாக்கித் தாக்கி, உயிரை மாயத்துக் கொள்ளும் நிலைக்குக் கொண்டு வந்தார்கள். அந்த நேரத்தில் நான் உதவி செய்யாமல் இருந்திருந்தால், ஞானசார தேரர் இன்று உயிரோடு இருந்திருக்க மாட்டார்.
வஹாபிசம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து சிங்கள தேசத்தையும் புத்த சாசனத்தையும் காப்பாற்ற, அரசாங்கம் செய்ய வேண்டிய பொறுப்புகளை நிறைவேற்றச் சென்ற ஞானசாரரை, இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பயங்கரவாதியாகச் சித்தரித்தார்கள்.
இவர் செய்த சேவைகளைக் குறைத்து மதிப்பிட்டு கண்டபடி பேசுகிறார்கள். நாட்டிற்கும் இனத்திற்கும் செய்ய வேண்டியதைச் செய்து, நாடு, இனம் மற்றும் முழுச் சங்க சமூகத்தையும் காப்பாற்றச் சென்ற ஒரு மனிதருக்கு அவதூறு செய்தனர்.
அந்த நேரத்தில் தான் நான் முன்னால் வந்தேன். மைத்திரி தியானம் செய்யுங்கள் என்று அவருக்குக் கூறினேன்.அவர் நிலைகுலைந்த அந்த நேரத்திலும், "நாளைக்கு மூன்று மணிநேரம் மைத்திரி பாவனை செய்யுங்கள்" என்று நான் கூறினேன்.
இதன் மூலமே அவருடைய மன அழுத்தத்தைப் போக்கி அவரை விடுவித்தேன். இந்த அநீதியான ஆட்சியை வீழ்த்தி, தர்மத்தை நிலைநாட்டும் வரை இந்தப் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment