Header Ads



ஞானசாரரின் காவி ஆடை நீக்கப்பட்டமைக்கு எதிராக போராட்டம்


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதற்கு சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிராக அமைதி வழிப் போராட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 


இன்று (07) காலை 9.00 மணிக்கு கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் இந்தப் போராட்டம் நடைபெறும் என நிதியகம சந்திம தேரர் தெரிவித்துள்ளார். 


நம் அனைவருக்கும் நாடு, இனம், மதம் மற்றும் கலாசாரம் என அனைத்தும் உள்ளன. 


நாங்கள் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், நமது கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி ஆடையைக் களைந்து, பகிரங்கமாகக் கொண்டு வரப்பட்டமை அனைவரின் மனதையும் அதிர்ச்சியடையச் செய்த ஒரு விஷயமாகும். 


இவ்வாறானதொரு முன்னுதாரணம் நாட்டில் எவருக்கும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வது இளைஞர்களாகிய நம் அனைவரினதும் பொறுப்பாகும் என தெரிவித்துள்ளார். 


 ஞானசார தேரரின் காவி ஆடையைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பாக பௌத்தர் என்ற ரீதியில் வருத்தமடைவதாக ஓய்வுபெற்ற ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 


பாட்டலி சம்பிக்க ரணவகவும் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், தேரரின் காவி உடையை அகற்றுவதற்குச் சிறைச்சாலைத் திணைக்களத்திற்கு அதிகாரமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 


இந்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்றில் கருத்துரைத்த சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீரவும் தமது கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார்.

No comments

Powered by Blogger.