Header Ads



சட்டத்தைவிட பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பலமான உறவு மூலமே போதைப்பொருள் பேரழிவில் இருந்து காப்பாற்ற முடியும்.


சட்டத்தை விட  பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான பலமான உறவு மூலமே போதைப்பொருள் பேரழிவில் இருந்து பிள்ளைகளை காப்பாற்ற முடியும். எனவே, இந்தப் பேரழிவின் மோசமான தாக்கம் மற்றும் பிள்ளைகளின் நடத்தைகளைக் கண்காணிக்கும் முறை குறித்துப் பெற்றோருக்கு நேரடி விழிப்புணர்வூட்டுவதன் ஊடாக பிள்ளைகளைப் பாதுகாப்பதில் அவர்களின் முழுமையான பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கான  முறையொன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.


நாட்டிலிருந்து  போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டுச் சபை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (30)   கூடியபோதே ஜனாதிபதி இந்தப் பணிப்புரைகளை வழங்கினார்.


தமது பிள்ளை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் ஆபத்து காணப்படுமாயின்,  பெற்றோருக்கு  அது குறித்து அறிவிப்பதற்கு நம்பிக்கைக்குரிய நபர் ஒருவரின் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுவாக ஒரு ஆசிரியர் அல்லது மதத் தலைவரின் உதவி பெற நேரிடும் என்றும் அது தொடர்பில் கவனம் செலுத்தி நம்பிக்கைக்குரிய வழிகாட்டலை வழங்கக்கூடிய முறையான செயல்திட்டமொன்றை உருவாக்குமாறும், ஆசிரியர்களை  இதற்காகப் பயன்படுத்துவதாயின் அவர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.