அரிசி என்ற போர்வையில்
அரிசி என்ற போர்வையில் கடத்தப்படவிருந்த பீரங்கி வெற்றுத் தோட்டாக்களை, மீட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஓருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போர்க் காலத்தில் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட 196 பீரங்கி வெற்றுத் தோட்டாக்களை அரிசி ஏற்றுமதி எனும் போர்வையில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குக் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்கள் அடங்கிய கொள்கலன் ஒன்றை கொழும்பு துறைமுகத்தில் வைத்து மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகம் கைப்பற்றியுள்ளது.
இதற்கு முன்னரும் இதே முறையில் 3 கொள்கலன்களில் பீரங்கி வெற்றுத் தோட்டாக்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய ஏனைய நபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment