பழங்களை விற்பனை செய்பவர்கள், வாங்குபவர்கள் கவனத்திற்கு
நச்சற்ற பழங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை இலகுவில் அடையாளம் காணும் வகையில் QR குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நச்சுப்பொருட்கள் அடங்கிய பழங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தாமல் பழங்களைப் பழுக்க வைக்கும் முறைகள், பண்ணைகளில் பழங்களை அறுவடை செய்யும் முறைகள் மற்றும் நுகர்வோருக்குப் பாதுகாப்பாக விநியோகிப்பது தொடர்பான பயிற்சிகள் வர்த்தகர்களுக்கு வழங்கப்படும்.
எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நச்சற்ற பழங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு சிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும். நாடு முழுவதிலும் உள்ள பழக்கடைகளைக் வரைபடமாக்கி (Mapping), நச்சற்ற பழங்களை விற்பனை செய்யும் கடைகளைச் சிறப்பான QR குறியீடு மூலமாக நுகர்வோர் இலகுவாக அடையாளம் காணக்கூடிய புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Post a Comment