Header Ads



வெற்றிகரமான முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது - ஜனாதிபதி


வலுசக்தி சந்தையில் வலுவான அரச பங்கைப் பேணி, மக்களுக்கு செயற்திறனாக சேவையாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும், அதனை நிறைவேற்றுவதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமான முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது என்றும், தற்பொழுது இலங்கையில் வலுவான மற்றும் மக்களுக்குச் சுமையாக இல்லாத வலுசக்திச் சந்தையொன்று கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) ஜெட்  A-1 குழாய் கட்டமைப்பு மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் இலங்கை  பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்திற்கு (CPSTL) உரிய இரண்டு புதிய எண்ணெய் தாங்கி சேமிப்புத் தொகுதிகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (02)  கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.


92,000 கன மீட்டர் மொத்த கொள்ளளவு கொண்ட ஐந்து புதிய ஜெட் ஏ-1 எரிபொருள் தாங்கிகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதுடன்,  இரண்டு பெரிய ஜெட் ஏ-1 தாங்கிகள் (ஒவ்வொன்றும் 30,000 கன மீட்டர் வீதம்), இரண்டு நடுத்தர அளவிலான தாங்கிகள் (ஒவ்வொன்றும் 15,000 கன மீட்டர் வீதம்) மற்றும் 2,000 கன மீட்டர் கொண்ட மேலதிக தாங்கியும் இதில் உள்ளடங்கும். முத்துராஜவெல தாங்கி வளாகத்திலிருந்து 21 கிலோமீட்டர் நீளமும் 10 அங்குல விட்டமும் கொண்ட நிலத்தடி குழாய் மூலம் விமான நிலையத்திற்கு எரிபொருள் விநியோகக் குழாய் கட்டமைப்பு இணைக்கப்படும். இத்திட்டம் 30 மாதங்களில் நிறைவுசெய்யப்படவுள்ளது.


No comments

Powered by Blogger.