அரசாங்கத்தின் சிஸ்டம் சேஞ்ச் இதுதானா..?
கம்பஹாவில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிவாரணங்களை வழங்குவதாக உறுதியளித்திருந்தார். மக்கள் நிவாரணம் கிடைக்கப்பெறும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.
எரிபொருட்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்குவதாக உறுதிமொழி வழங்கிய போதிலும் சில வகை எரிபொருட்களுக்கான விலைகளை 10 ரூபாய் 15 ரூபாய் மற்றும் 50 ரூபாய் அரசாங்கம் அதிகரித்துள்ளது.
நிவாரணம் வழங்குவதாக கூறி விலை உயர்த்தும் புதிய நிவாரண திட்டமொன்றை இந்த அரசாங்கம் நாட்டுக்கு அறிமுகம் செய்துள்ளது. அரசாங்கத்தின் சிஸ்டம் சேஞ்ச் திட்டத்தில் இதுவும் ஓர் அங்கமாக இருக்கக் கூடும்.
பொதுவாக நாமும் இந்த நாட்டு மக்களும் ஏதேனும் ஒரு பொருளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டால் அந்த பொருளின் விலை குறையும் என்று நினைத்திருந்தோம், எனினும் இந்த அரசாங்கம் அந்த விடயத்தை மாற்றி அமைத்துள்ளது.

Post a Comment