Header Ads



'பிளை துபாய்'' துணை விமானியின் செயலில் ஈரானுக்கு தொடர்பிருந்தால்...?


"பிளை துபாய்" பயணிகள் விமானத்தை தரையில் மோதி வெடிக்க செய்யும் செயலின் பின்னணியில் ஈரானுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தால் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.


இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை ட்ரம்ப் சந்தித்தார். அப்போது ‘ஃபிளை துபாய்’ விமானத்தை தரையில் மோதி வெடிக்க செய்யும் செயலில் ஈடுபட்ட துணை விமானி உடன் ஈரானுக்கு தொடர்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


“காவலில் உள்ள துணை விமானியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நான் கேள்விப்பட்டதில் இருந்து எனக்கு தெரிந்த தகவலின் அடிப்படையில் ‘ஆம்’ என்று என்னால் பதில் சொல்ல முடியும். இருப்பினும் அதனை அறிய முயற்சிகள் நடைபெறுகிறது” என ட்ரம்ப் தெரிவித்தார்.


ஈரானுக்கு தொடர்பு இருந்தால் என்ன செய்வீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டனர். “அது குறித்து கவலை கொள்ள வேண்டாம். நிச்சயம் அவர்கள் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்வோம். இது குறித்து அவர்களிடம் நீங்கள் கேட்கலாம். என்ன நடந்தது என்பது அவர்களுக்கு தெரியும்” என்று ட்ரம்ப் கூறினார்.

No comments

Powered by Blogger.