காசாவில் இனப்படுகொலை எனத் துணிச்சலாகக் குரல் கொடுத்தவருக்கு நோபல் பரிசு - காரியப்பர் பாராட்டு
காசாவில் இடம்பெற்றது இனப்படுகொலை எனத் துணிச்சலாகக் குரல் கொடுத்த நீதிபதி நவீ பிள்ளைக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதையிட்டு, முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் தனது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தனது எக்ஸ் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
இன்றைய சூழ்நிலையில் காசாவில் நடைபெறுகின்ற இனப்படுகொலையை கண்டித்து நீதிக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் துணிச்சலுடன் குரல் கொடுப்போரின் பங்களிப்பை அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment