Header Ads



ஞானசரர் போன்று வீரவன்சவும் கம்பி எண்ணுவாரா..?


நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கடந்த செப்டம்பர் மாதம் அனுராதபுர பகுதியில் நடைபெற்ற மக்கள் பேரணியொன்றில் உரையாற்றியபோது, நீதிமன்ற உத்தரவை விமர்சித்து அவர் வெளியிட்ட உரைக் கூற்றுக்கேற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதன்போது, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றக் இலக்கம் 01இல், வழக்கு இலக்கம் 73294/01/2026 இன் கீழ் முன்னிலைப்படுத்தப்பட்ட 04 ஆம் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு 2026.09.04 அன்று பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை அவர் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.


இது தொடர்பில் நீதிமன்ற அவமதிப்பு குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரகம, பொலிஸ் மா அதிபருக்கு விடுத்த எழுத்துப்பூர்வ அறிவிப்புக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.


இதன்போது, குறித்த உரையை ஒளிபரப்பிய 07 பிரதான அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளிடம் இருந்து, அந்த முழுமையான உரையும் அடங்கிய திருத்தப்படாத (Unedited) காணொளிகளைப் பெற்றுக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.


இதற்கமைய, திருத்தப்படாத வீடியோ காட்சிகள் அடங்கிய காணொளித் வட்டுகள் (DVDs) பெறப்பட்டுள்ளன.


அந்த விசாரணைப் பதிவுகள் அடங்கிய சான்றுக் கோவைகள் மற்றும் அவ்வுரை அடங்கிய காணொளிகள் கொண்ட DVD வட்டுகள் என்பன கொழும்பு இலக்கம் 02 நீதிமன்றத்திற்கு சாட்சியங்களின் சுருக்கக் குறிப்பு அடங்கிய மேலதிக அறிக்கையுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.



 

No comments

Powered by Blogger.