Header Ads



குடும்பத்தில் ஒரே பிள்ளை - இறுதிப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மரணம்


வத்தளையில் நிறுவனம் ஒன்றில் கடல்சார் பாடநெறியை பயின்று வந்த 20 வயது இளைஞர் ஒருவர் ரயிலில்  இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் இயங்கிக் கொண்டிருந்த ரயிலில்  இருந்து கீழே விழுந்துள்ளார்.


அவர் இந்தப் பாடநெறியின் இறுதிப் பரீட்சைக்கு தோற்றிவிட்டு தொடருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போதே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளார்.


அவருடைய தந்தை வெளிநாட்டில் பணியாற்றி வரும்  நிலையில், அவர் தான் குடும்பத்தின் ஒரே பிள்ளை என்றும்  விசாரணையில் தெரியவந்துள்ளது.  பாணந்துறை தெற்குப் பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.