இடைத் தேர்தல்களில் த.வெ.க. வெற்றி
தமிழ்நாடு மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் வெற்றி பெற்றுள்ளனர். இரு தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று த.வெ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்
தாராபுரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா 62,596 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் சுகன்யா 52,400 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் சத்யபாமா 10,196 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Post a Comment