Header Ads



சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் நம்பிக்கையில்லாப் பிரேரணை


சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்று (09) பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோகனதீரவிடம் கையளிக்கப்பட்டது.


எதிர்க்கட்சியின் பிரதிப் பிரதம கொறடா அஜித் பி. பெரேரா, தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் கரியப்பர், மற்றும் புதிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான ரவி கருணநாயக்க, திலிப் வேதாரச்சி, சமிந்த விஜேசிறி மற்றும் வருண லியனகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

No comments

Powered by Blogger.