Header Ads



கடுழியச் சிறைத்தண்டனை என்றால், அந்த நபர் சிறை ஆடையையே அணிய வேண்டும்...


சிறைச்சாலை விதிமுறைகளின்படி 3 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் சிறைச்சாலையினால் வழங்கப்படும் சிறை ஆடையை அணிந்தே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும்.


பௌத்த பிக்கு ஒருவருக்கு நீதிமன்றத்தினால் சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அந்த் தண்டனைக் காலத்தைச் சிறைச்சாலையில் கழிக்கும் போது அவர் தமது காவி ஆடையை அணிய முடியும்.


இருப்பினும், விதிக்கப்பட்டது கடுழியச் சிறைத்தண்டனை என்றால் எந்தவொரு நபரும் சிறை ஆடையையே அணிய வேண்டும். தண்டனை பெற்ற ஒருவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் போது அவரது சிறைத்தண்டனைக் காலம் 3 ஆண்டுகளை விடக் குறைவானதாக இருந்தால் அவர் தண்டனைக்கு முன்னர் அணிந்திருந்த சாதாரண ஆடையை அணிவதற்குச் சிறைச்சாலை அத்தியட்சகர் அனுமதி வழங்க முடியும்.


சிறைச்சாலைகள் ஆணையாளர்  சேனக்க பள்ளேதன்ன 

No comments

Powered by Blogger.