Header Ads



சிறுமிகளை சீரழித்த இலங்கை பிக்குவுக்கு அவுஸ்திரேலியாவில் 13 ஆண்டுகள் சிறை


மெல்போர்னில் உள்ள தனது ஆலயத்தில் ஆறு சிறுமிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய பௌத்த பிக்கு  நௌதுன்னே விஜித்தக்கு 13 ஆண்டுகள்  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 அவரது குற்றங்களை 'நம்பிக்கைத் துரோகம்' என்று நீதிபதி வர்ணித்துள்ளார். தண்டனை அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, தங்களைச் சீரழித்த நௌதுன்னே விஜித்த பிக்கு நீதிமன்றத்தில் இருந்த தனது ஆதரவாளர்களைப் பார்த்துப் புன்னகைத்து கையசைத்ததைக் கண்டு, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அருவருப்புடன் அவரை நோக்கினர்.


மெல்போர்னின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள 'தம்ம சரண' ஆலயத்தின் தலைமைத் துறவியாக இருந்த 71 வயதான நௌதுன்னே விஜித்த  அந்தப் பதவியின் காரணமாக இலங்கை பௌத்த சமூகத்தினரிடையே மிகுந்த மரியாதையைப் பெற்றிருந்தார்.


விஜித்தவிடம் "இருண்ட மற்றும் disturbing (மனதை உறுத்தும்) தன்மை கொண்ட ஒரு பக்கம்" இருந்ததாக நீதிபதி பர்தீப் திவானா (Pardeep Tiwana) குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.