Header Ads



ஞானசாரவுக்கு காவி உடையை அணிவிக்க கோரி மனு தாக்கல்


சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை ஏனைய வழக்குகளுக்காக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தும்போது, அவரை காவி உடையை அணிவித்து ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜயதிலக்கவினால் இம்மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


குறித்த மனுவின் பிரதிவாதிகளாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.