புதிய தலைவராக குசல் மெண்டிஸ்
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகிய நிலையில், அந்த பதவிக்கு குசல் மெண்டிஸ் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று - 8 - நடைபெற்ற விசேட கலந்தரையாடலைத் தொடர்ந்து, தெரிவுக் குழுவினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, டெஸ்ட் தலைவராக குசலின் முதலாவது பணியாக அமையவுள்ளது.
குசல் மெண்டிஸ் இலங்கை டெஸ்ட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன், இலங்கை டெஸ்ட் அணியை வழிநடத்தும் வாய்ப்பைப் பெற்ற 19ஆவது தலைவராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

Post a Comment