Header Ads



நாம் சுமந்துள்ள வேதம் படிக்கும்படி, வாசிக்கும்படி, சிந்திக்கும்படி நம்மை தூண்டுகிறது...


B-2 பறக்கும் அரக்கன் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா..? 


அறிவியலை நாம் ஆயுதமாக ஏந்தாததால் நாம் எதை இழந்தோம்? 

 

அறிவியலை நாம் கையில் ஏந்தும் போது அது பெரும் வரமாகவும், அதனை நாம் கைவிடும்போது, அது ஒரு சபமாகவும் மாறுகிறது. 


B-2 பறக்கும் அமெரிக்க அரக்கன் விமானம் எந்த வான்வெளியையும் ஊடுருவி, எந்த இலக்கையும் தாக்கி விட்டு வரவல்லது. 


பின்னர் அது யாருக்கும் தெரியாமல் விர் என்று பறந்து வந்து பாதுகாப்பாக வீடு வந்து சேரும். 


அது எந்தவொரு ராடாரிலும் தென்படாது. 


செயற்கைக்கோள்களால் கண்டறியவே முடியாது. ஹீட்  டிரேசிங் சிஸ்டம் மூலமும் கண்டுபிடிக்க முடியாது. யாராலும் அதனை  மெனுவலாக இயக்க முடியாது. ஏனெனில் அதன் வடிவமைப்பு மிகத் துல்லியமானது.


காரணம் என்ன தெரியுமா?


அது  நுண்ணறிவுள்ள மனித புத்திகளால் வடிவமைக்கப்படது. சிறந்த தலைகளின்  உழைப்பால் உருவாக்கப்பட்டது. 


நவீன உலகில் ஏன் அமெரிக்கா பலமான சக்தியாக திகழ்கிறது தெரியுமா? 


ஏனெனில் அது அறிவுக்கு மதிப்பளித்தது. தலைகளையும் புத்திகளையும் விலைக்கு வாங்கிறது. ஆய்விலும் டெக்னாலஜியிலும் முதலீடு செய்கிறது. 


பல்கலைக்கழகங்களை கட்டுகிறது. 

ஆய்வகங்களையும் நிறுவுகிறது 

ஆய்வாளர்களை வரவழைக்கிறது. 

விஞ்ஞானிகளை கெளரவிக்கிறது. 

மறுபுறம் தமது அரபு நாடுகள்..

பாடகர்களை பணம் கொடுத்து வரவழைத்துக் கொண்டிருக்கிறது. கால்பந்து வீரர்களை போட்டி போட்டு கெளரவப்படுத்திக் கொண்டிருக்கிறது. 


மெஸ்ஸியையும். ரொனால்டோவையும் மில்லியன்கணக்கு கொடுத்துவாங்குகிறது 


ஷாகிரா மற்றும் நான்ஸி நடனம் பார்த்து மதிமயங்கி மகிழ்கிறது. 


உல்லாசங்களுக்கும், கேளிக்கைகளுக்கும் கோடான கோடிகளை கொட்டுகிறது. 


அறிவியல் ஆராய்ச்சிக்கு பட்ஜெட் எதுவும் இல்லை, அறிஞர்களை மதிப்பதும் இல்லை. 


புத்தியுள்ள தலைகளை விலை கொடுத்து வாங்குவதில்லை. மாறாக (மெடிரியலி & மோரலி) புத்தியை மழுங்கடிக்க வைக்கும் அத்தனையையும் ஊக்குவிக்கிறது. 


விளைவாக, இரத்தம் கொதிக்கும் நமது வாலிப சமூகம் பாடகிகளின் பின்னால் ஓடுகின்றது.  கால் பந்து வீரனுக்கு கைதட்டுகிறது. 


பினன்ர நாம் ஏன் பலவீனமான சமுதாயமாக இருக்கிறோம்?


நாம் ஏன் அடிமைப்படுத்தப்படுகிறோம்?

நாம் ஏன் அடக்கி ஆளப்படுகிறோம்?

என்று நாமே கேள்வி எழுப்புகிறோம்?

விடை மிகவும் எளிதானது, தெளிவானது. 


நாம் நமக்கு திசை காட்டும் திசைகாட்டியை தொலைத்து விட்டோம், ரோல் மாடல்களை பின்தொடர ஆரம்பித்து விட்டோம். 


வாலிபர்கள் பெருமக்களே...!


படிக்காதவருகளாக, வாசிக்காதவர்களாக நீங்கள் இருந்தால் குறைந்தபட்சம் படிக்க வாசிக்க தூண்டக் கூடியவர்களாக இருக்கப் பாருங்கள். 


ஆய்வாளர்களாக, கண்டுபிடிப்பாளர்களாக நீங்கள் இல்லாவிட்டால் குறைந்த பட்சம் ஆய்வு செய்ய, கண்டு பிடிக்க ஒத்தாசை கொடுக்கக் கூடியவர்களாக இருக்கப் பாருங்கள். நாகரீகத்தை க்டியெழுப்ப ஆர்வம் காட்டும் கூட்டத்தோடு சேர்ந்துகொள்ளுங்கள்.

  

நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்...


கேளிக்கை உலகில் ஜாலியாக இருப்பதா... அல்லது மறுமலர்ச்சிப் பாதையில் போய் இணைந்து கொள்வதா...


அறிவுக்கு மரியாதை செலுத்துங்கள்...


புத்தியை பயன்படுத்துங்கள்...


நாம் சுமந்துள்ள வேதம் படிக்கும்படி,  வாசிக்கும் படி, சித்திக்கும் படி நம்மை தூண்டுகிறது என்பதை மறவாதீர்கள். 


✍ தமிழாக்கம் /  imran farook

No comments

Powered by Blogger.