Header Ads



அனாதைகளுக்கு சேவை செய்தபடியே, பள்ளிவாசலுக்குள் உயர் மரணத்தை தழுவிய ஜவாத் மூசா


காசாவில் உள்ள அல்-தவ்பா பள்ளிவாசலில் அனாதைகளுக்கு நிதியுதவிகளை விநியோகிக்கும் போது ஜவாத் மூசா  ஷஹீதாக்கப்பட்டார். நேற்று திங்கட்கிழமை (15) இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.


அனாதைகளுக்கு சேவை செய்தபடியே,  பள்ளிவாசலுக்குள் உயர் மரணத்தை தழுவியுள்ளார் இந்த உன்னதமான மனிதர். இறப்புக்கு பின்னராக அவரது முகத்தில் புன்னகையும், பிரகாசமும் நம்மை நெகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது.


அல்லாஹ் அவரை தியாகிகளில் ஒருவராக ஏற்றுக்கொண்டு, ஜன்னாவில் உயர்ந்த பதவிகளை வழங்குவானாக.


காசா தியாகம் மற்றும் தன்னலமற்ற பற்றிய கதைகளை தொடர்ந்து உலகிற்கு கூறிக் கொண்டிருக்கிறது.

No comments

Powered by Blogger.