Header Ads



ஈரானிய தூதுவருடன் விஜித ஹேரத் சந்திப்பு


இலங்கைக்கான ஈரானிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 


வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தனது X கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டு, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார். 


இந்தக் கலந்துரையாடலின் போது, ​​பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்து ஈரானிய தூதுவரிடம் வலியுறுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். 


மோதல்கள் மேலும் அதிகரிப்பதால் பிராந்தியத்திலும் இலங்கையிலும் ஏற்படும் தாக்கம் மற்றும் ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் விஜித ஹேரத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.