பழிவாங்கும் அநுரரகுமார அரசை, நாங்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்பியே தீருவோம்
பழிவாங்கும் அநுர அரசை நாங்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்பியே தீருவோம் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்வின் மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சத்துர சேனாரத்ன தெரிவித்தார்.
ஊழல், மோசடிக் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தான் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக முன் பிணை மனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையிலேயே அவரது மகன் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் நிச்சயமாக இந்த அரசை வீழ்த்துவோம். எனது தந்தை கைது செய்யப்படுகின்றாரோ, இல்லையோ இந்த அரசு வீழும் என்பது உறுதி. பழிவாங்கும் அநுர அரசை நாங்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்பியே தீருவோம் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment