Header Ads



இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பாராட்டு


இலஞ்சம், ஊழலை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று -03- ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை பொருளாதார ரீதியில் நிலையான பயணத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார ஊழல், மோசடியை ஒழிக்க தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ரிச்சர்ட் மார்ல்ஸை தெளிவுபடுத்தினார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையிலான 70 வருட பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை நினைவுகூர்ந்த பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்படுவதே தமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டார்.

2025-06-03

No comments

Powered by Blogger.