இந்திய சங்கிகளின் இரட்டை நிலைப்பாடு...
- வலையுகம் ஹைதர் அலி -
ஜூன் 3 முதல் 8 வரை அதாவது ஹஜ் பெருநாள் முடியும் வரை அனைத்து கால்நடை சந்தைகளையும் மூட வேண்டுமென மஹாராஷ்டிர கோசேவ ஆயோக் உத்தரவிட்டு உள்ளூர் விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளது.
மதவழிபாட்டுரிமை கொடுக்கப் பட்டுள்ள சிறுபான்மை மக்கள் வழிபாட்டுரிமையில் தலையீட்டு ஹஜ் பெருநாளைக்கு கால்நடைகள் அறுத்து ஏழைகளுக்கு கொடுத்து பகிர்ந்துண்ணும் கடமையை தடுப்பதற்காக இதுபோன்ற கீழ்த் தரமான செயல்களை செய்கிறது.
அதே சமயத்தில் வெளிநாட்டு ”ஷேக்” குகளுக்கு போலியான முஸ்லிம் கம்பெனி பெயர் கொண்ட கார்ப்பரெட் பெருமுதலாளி பனீயாக்கள் கப்பல், கப்பலாக மாடுகளை ஏற்றுமதி செய்கிறார்கள்.
வெளிநாட்டு ”ஷேக்”குகள் சாப்பிடலாம் உள்நாட்டு ஏழைகள் சாப்பிடக் கூடாதா ?
பெரும் மார்வாடி பனீயாக்கள் கால்நடைகளை கடல் கடந்து விற்கலாம் ஊள்ளூர் ஏழை இந்து விவசாயி விற்கக் கூடாதா? என்னங்கடா நியாயம் இது ?
பசு பாதுகாப்புக் குழு என்ற பெயரில் சமூக விரோதிகள் உள்ளூர் அப்பாவி மக்கள், வியாபாரிகள் மீது தினமும் தாக்குதல் நடத்திக் கொண்டே மாடுகளை கப்பல் கப்பல்களாக வெளிநாடுகளுக்கு இறைச்சிக்காக அனுப்புகிறார்கள் என்னடா களவானித்தனம் இது.
Post a Comment