பகிடிவதை சம்பவத்தால் விபரீத முடிவையெடுத்த மாணவி
குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகிலுள்ள ஆற்றில் நேற்று (02) மதியம் குறித்த மாணவி குதித்ததாகவும், அருகில் இருந்த சிலரால் அவர் மீட்கப்பட்டு குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் நடத்திய விசாரணையில், பகிடிவதை கொடுக்கப்பட்ட சம்பவத்தால் அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.
குறித்த மாணவிக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குளியாப்பிட்டி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment