Header Ads



மாட்டை கடக்க முயற்சிக்கையில் விபத்து - 2 இளைஞர்கள் உயிரிழப்பு


புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் மாடொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 


இன்று மாலை 6.30 மணியளவில் புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி அதிக வேகத்துடன் பயணித்த இளைஞர்கள் இருவரும் வீதியின் குறுக்கே வந்த மாட்டைக் கடப்பதற்காகத் முயற்சித்த போது, எதிரே இருந்த மின்சார கம்பத்துடன் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 


உயிரிழந்த இருவரும் கந்தரோடை சுண்ணாகம் பகுதியைச் சேர்ந்த 17, 18 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். 


விபத்துச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


- பிரதீபன் -

No comments

Powered by Blogger.