காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம்; ஹமாஸின் பதிலை எதிர்பார்த்துள்ள உலகம்
காசா பகுதியில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இன்று (02) அறிவித்துள்ளார்.
அமெரிக்கா, எகிப்து, கட்டார் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், போரிடலை தற்காலிகமாக நிறுத்தி, இஸ்ரேல் கைதிகளையும் பலஸ்தீன கைதிகளையும் பரிமாறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் தனது Truth Social தளத்தில், “இது இறுதி யோசனை. ஹமாஸ் இப்போது ஏற்கவில்லை என்றால், நிலைமை மேலும் மோசமாகும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment