Header Ads



ஏழை விவசாயக் கூலித் தொழிலாளியின் மகன், முஹம்மது இர்பான் வரலாற்றுச் சாதனை


- Nasrath S Rosy -

ஏழை விவசாயக் கூலித் தொழிலாளி  சலாஹுத்தீனுடைய 17 வயது மகனான இர்ஃபான்.  இந்தியா உத்தரப் பிரதேசம், சந்தௌலி பகுதியில் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பிடித்துள்ளார். தன்னுடன் சமஸ்கிருத மீடியத்தில் பயின்று இறுதி தேர்வுகள் எழுதிய மொத்தம் 13,738 மாணவர்களில் 82.71% மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார் இவர்.


உபியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு இறுதி தேர்வுகளில் சமஸ்கிருத பாடங்களில் உச்ச மதிப்பெண்களைப்பெற்ற  20  மாணவர்களில் ஒரே முஸ்லிம் மாணவராக இவர் அறியப்படுகிறார். அதிக கட்டணம் செலுத்தி மற்ற பள்ளிகளில் படிக்க வைக்க முடியாத காரணத்தால் தான் இலவச சமஸ்கிருத பள்ளிக்கூடமான அரசு  சம்பூர்ணாத் சமஸ்கிருத பள்ளியில் தன் மகனை படிக்க வைத்ததாக கூறுகிறார் அவரது தந்தை. சமஸ்கிருத மொழியில் பாண்டித்தியம் பெற்று சமஸ்கிருத ஆசிரியர் ஆக வேண்டும் என்பதே இர்ஃபானின் ஆசையாம். இவர் படித்த பள்ளியில் சமஸ்கிருதமும் இலக்கியமும் கட்டாய பாடங்களாகும். 


குடியிருப்பதற்கு நிரந்தர வீடில்லாத காரணத்தால் மிகவும் அவதிப்பட்ட இவர்களுக்கு சகல்தியா தாலூகாவில் ஜிந்தாஸ்ப்பூர் கிராமத்தில் ஒரு எளிய வீடு கட்டிக்கொள்ள பணம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சமஸ்கிருத மொழியில் பிஏ படித்தால் சாஸ்திரியாகவும் எம்ஏ படித்தால் ஆச்சார்ய பட்டமும் பெற்றுவிட முடியும், அவற்றை படித்து முடிப்பது தான் இர்ஃபானுடைய ஆசை என்கிறார் அவரது தந்தை. 

No comments

Powered by Blogger.