Header Ads



டொலரின் பெறுமதி 1000 ரூபாவினை எட்டும் - கலாநிதி தனவர்தன



அமெரிக்க டொலரின் பெறுமதி ஆயிரம் ரூபாவினை எட்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பௌத்த மத விவகாரப் பிரதானி கலாநிதி தனவர்தன குருகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


அரசாங்கத்திற்கு டொலர் திரட்டிக் கொள்வதற்கான சரியான முறைகள் எதுவும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எதிர்வரும் ஆறு மாத காலப் பகுதியில் அமெரிக்க டொலரின் பெறுமதி ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக உயர்வடையும் என அவர் தெரிவித்துள்ளார்.


அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் மறைகரமாக ராஜபக்சர்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்சக்களின் கைப்பாவையாக இயங்கி வருகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.


ரணில் ஆட்சி செய்தாலும் ராஜபக்சர்களுக்கு தேவையான வகையில் ஆட்சி முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


கலாநிதி குருகே, எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.