Header Ads



காணாமல் போயுள்ள நூற்றுக்கணக்கான சொகுசு வாகனங்கள்


மாகாண சபைகளின் அரசியல் அதிகார சபைக்கு சொந்தமான 207 சொகுசு வாகனங்களை தற்போது யார் பயன்படுத்துகிறார்கள்? என்பது தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இது தொடர்பில் கணக்காய்வு கோருவதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


தகவல் அறியும் சட்டத்தின் கீழ், உரிய சொகுசு வாகனங்களை யார் பயன்படுத்துகிறார்கள், என்னென்ன கடமைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பது தொடர்பான தகவல்களைக் கோருவதற்கு எம்பிக்கள் குழு தயாராகி வருகிறது.


குறிப்பாக குறிப்பிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு வாகனங்கள் இல்லாத சூழ்நிலையில் இந்த விடயம் பாரதூரமானது என தெரிவிக்கப்படுகின்றது.


தற்போது அரசாங்கத்திற்கு புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை என்பதுடன் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வாகனங்கள் இல்லாத நிலை காணப்படுகின்ற அதேவேளை மாகாண சபைகள் கலைக்கப்பட்ட போது அது தொடர்பான வாகனங்களுக்கு என்ன ஆனது என்பது தீவிர விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. .


ஒரு மாகாண சபையின் முதலமைச்சருக்கு நான்கு வாகனங்களும், அவைத்தலைவருக்கு மூன்று வாகனங்களும், நான்கு மாகாண சபை அமைச்சர்களுக்கு தலா இரண்டு வாகனங்களும், சபைத் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு தலா ஒரு வாகனமும் வழங்கப்படும் . இதன்படி, ஒன்பது மாகாண சபைகளுக்கும் சொந்தமான வாகனங்களின் எண்ணிக்கை 207 ஆக இருந்தது.

No comments

Powered by Blogger.