Header Ads



அரசாங்கம் சொல்வதை ஒருபோதும் ஏற்கமுடியாது - றிசாட்


 - ஹஸ்பர் -


மக்கள் எதிர்பார்த்த ஒரு தேர்தல், உரிய நேரத்தில் நடாத்த வேண்டியதொரு தேர்தலை ஜனநாயக ரீதியான தேர்தலை நடாத்தாமல் அரசாங்கம் சாட்டுட் போக்குகளை சொல்லி பிற்போடுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னால் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  றிசாட் பதியுதீன் தெரிவித்தார். 


திருகோணமலை,நிலாவெளி பகுதியில் இன்று (17) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்


 இந்த   நாட்டில் அரகலை ஏற்பட்டு அரகலையின் ஊடாக 69 இலட்சம் வாக்குகளை பெற்ற ஜனாதிபதி விரட்டப்பட்டிருக்கிறார். பிரதமர் அகற்றப்பட்டுள்ளார் .அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் மக்கள் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு மின்சார பட்டியல் அதிகரிப்பு,அத்தியவசிய  விலை அதிகரிப்பு ,எரிபொருள் விலை ஏற்றம் என பல சுமைகளை போட்டு சாட்டுப் போக்குகளை வைத்து தேர்தலை பிற்போட முயற்சிக்கிறது.


இவ்வாறானவற்றை எமது கட்சி தேர்தல் ஆணைக்குழுவில் எடுத்து சொல்லியிருக்கிறது எது எவ்வாறாக இருப்பினும் ஜனநாயக நாட்டில் ஜனநாயக ரீதியாக தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் ஒருமித்த நிலைப்பாடாகும் இதற்காக உரிய நேரத்தில் தேர்தலை நடாத்த வேண்டும் என்பதில் தொடர்ச்சியாக ஜனநாயக ரீதியான போராட்டமும் தொடரும்  என்றார்.


No comments

Powered by Blogger.