Header Ads



உயிரிழந்த மாடுகள், எருமைகள், ஆடுகளின் எண்ணிக்கை 1660 அதிகரிப்பு


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய சீரற்ற வானிநிலை காரணமாக உயிரிழந்த மாடுகள், எருமைகள் மற்றும் ஆடுகளின் எண்ணிக்கை இன்று (12) மதியத்துடன், 1,660 ஆக அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்தது.


வங்கக்கடலில் நிலைகொண்ட மண்டோஸ் புயலால் ஏற்பட்ட திடீர் குளிர் வானிலை காரணமாக, குறித்த மாகாணங்களில் கடந்த வியாழன் (08) மற்றும் வெள்ளி (09) ஆகிய இரு தினங்களில் 802 மாடுகளும் 34 எருமை மாடுகளும் 256 ஆடுகளும் அடங்லாக 1,092 கால்நடைகள் உயிரிழந்தன.


மேலும், இன்று மதியம் வரையிலான காலப்பகுதிக்குள் 568 கால்நடைகள் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,660ஆக அதிகரித்துள்ளது.


திறந்த வௌியில் தங்கியிருந்த போது நிலவிய கடுமையான குளிரினால் ஏற்பட்ட மன அழுத்தமே கால்நடைகளின் உயிரிழப்புக்கான காரணம் என்று தரவுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.


மேலும், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கால்நடை புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னர், உயிரிழந்த கால்நடைகளின் மாதிரிகள், மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை கால்நடை வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  

1 comment:

  1. கால்நடை வளர்ப்பவர்கள்,பண்ணை உரிமையாளர்கள் இந்த இழப்பை நல்லதொரு வாய்ப்பாக அமைத்துக் கொண்டு அதற்கான விஞ்ஞான ரீதியான காரணத்தைக் கண்டுபிடித்து எதிர்காலத்தில் அதுபோன்ற இழப்புகள் ஏற்படாது பாதுகாத்துக் கொள்வதற்கான அரசின் உதவியுன் சகல ஏற்பாடுகளையும் செய்து கொண்டால் இத்துறையில் எதிர்காலத்தில் மேலும் முன்னேறலாம் என நம்புகின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.