Header Ads

புதிய நட்சத்திரம் நுஸ்ரத் நூர்


ஜார்கண்ட் மாநிலத்தின் நிர்வாகப்பணிகள் தேர்வுகளான JPSC யில் தேர்வாகி தற்போது ஜார்கண்ட் சுகாதார துறைக்கு தலைமை அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 27 வயதான  நுஸ்ரத் நூர் , அம்மாநிலத்தின் முதல் முஸ்லிம் பெண் தலைமை அதிகாரி என்கிற சிறப்பினையும் பெற்றுள்ளார். அம்மாநில அரசும் ஊடகங்களும் நுஸ்ரத் நூரினை கொண்டாடித்தீர்ப்பதை பார்த்து தற்போது இந்தியா முழுக்கவும் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


2020 ல் MBBS முடித்து கடந்த 2021ம் ஆண்டு மாநில நிர்வாக குடிமையியல் பணிகளுக்காக நடைபெறும் பப்ளிக் சர்வீஸ் தேர்வுகளுக்காக படிக்கத்தொடங்கி கடந்த மாதம் வெளியான தேர்வு முடிவுகளில் ஙெற்றிவாகை சூடி வந்துள்ளார் நுஸ்ரத் நூர். நேர்முகத்தேர்வில் தன்னுடைய நுண்ணறிவினை பிரதிபலிக்கச்செய்து அனைவரிடமும் பாராட்டினை பெற்றுள்ளார் அவர்.

ஜார்கண்டின் நிர்வாகப்பணிகளுக்காக பொதுவாக கல்வி கற்பித்தல், மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகளுக்காக மாத்திரமே பிரத்யேக தேர்வுகள் நடத்தப்பட்டு மாநில அரசுக்கான தலைமைப்பணியார்கள்தேரிந்தெடுக்கப்படுகின்றனர். 


கடந்த 2000வது ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த JPSC தேர்வுகளில் முதன்முறையாக ஒரு முஸ்லிம் பெண் தேர்வாகியுள்ளது அங்குள்ளவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அவருக்கு மருத்துவத்துறையில் தலைமை அதிகாரியாக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 


நுஸ்ரத் நூரின் தந்தை முஹம்மது நூர் ஆலம் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். அவரது தாய் சீரத் பாத்திமா வீட்டை கவனித்துக்கொள்ளும் ஒரு குடும்பத்தலைவி ஆவார். நுஸ்ரத் நூருக்கு திருமணமாகி இரண்டு வயதில் முஹம்மது ஸாத் என்கிற குட்டி மகனும் இருக்கிறார். நுஸ்ரத்தின் கணவர் முஹம்மது உமர்  , ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர் ஆவார், இருவரும் பத்து பேர் அடங்கிய உமருடைய குடும்பத்தினருடன் கூட்டாக வாழ்கின்றனர்.


ஜாம்செட்பூரில் இருக்கும் சாக்ரட் ஹார்ட் கான்வென்டில் இளங்கல்வியை முடிந்த நுஸ்ரத், 


மேற்படிப்பிற்காக தலைநகர் ராஞ்சியை வந்தடைந்தார், அங்கு ராஜேந்திரா இன்ஸ்ட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் நரம்பியலுக்கான சிறப்பு மருத்துவராக பட்டம் பெற்று, அதே மருத்துவக்கல்லூரியில் நரம்பியல்  மருத்துவராக பணியாற்றியவர் நுஸ்ரத்.


நிர்வாகத்தேர்வுகளுக்காக தாம் படிக்கவும் தேர்வு எழுதவும் தன்னுடைய கணவர் குடும்பம் மிகவும் உதவியதாகவும், குடும்ப பணிகள் எதனையும் தன் மீது சுமத்தி கஷ்டப்படுத்தவில்லை என்றும், குழந்தை ஸாதினை வளர்க்க மிகவும் உதவியதாகவும் நெகிழ்வுடன் கூறுகிறார் நுஸ்ரத், அவருடைய மூத்த சகோதரர் முஹம்மது நூர் மற்றும் அவரது கணவர் இருவருடைய உதவியின்றி தான் இந்த சாதனையை அடைந்திருக்க முடியாது என தன்னக்கடத்துடன் கூறுகிறார் அவர்.


முஸ்லிம் பெண்களை பொறுத்தவரை படித்துவிட்டு நிர்வாகப்பணிகளுக்கு வரவேண்டும் என்பது அவரது கோரிக்கை. தேர்வுகளில் வெற்றியோ தோல்வியோ நாம் விரும்பும் துறையில் வேலை கிடைக்கிறதோ இல்லையோ நாம் தேர்வுகள் எழுத முன்னேறி வரவேண்டும் எனவும், அதற்கான வழிமுறைகளை அறிந்து பிறருக்கும் அதுபற்றி விவரங்களை தெரிவித்து உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறார் இந்த ஜார்கண்டின் நம்பிக்கை நட்சத்திரம்.

பெற்றோர், அண்ணன் மற்றும் கணவர் குழந்தையுடன் நுஸ்ரத் நூர்.


S Nasrath Rosy1 comment:

  1. டாக்டர் நுஸ்ரத் நூர் அவர்களின் சாதனைக்கு முதலில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்கு எமது கனிவான மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.மருத்துவராகவும் மிகச்சிறந்த நிர்வாகியாகவும் பணியாற்றக் கிடைத்த அருமையான வாய்ப்பை அவர் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள அவருக்கு அல்லாஹ்வின் அருளும் சக அதிகாரிகள், ஏனையவர்களின் ஒத்துழைப்பும் கிடைத்து இந்தியாவில் அவர் போன்ற பல்லாயிரம் நிர்வாகத் தலைமைகள் உருவாக அல்லாஹ் அருள்பாலிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.