Header Ads



ஏலக்காயின் விலை 12,000 முதல் 14,000 ரூபாய் வரை அதிகரித்தது


தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் ஏலக்காயின் விலை 12,000 முதல் 14,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.


நாட்டில் பயிரிடப்படும் ஏலக்காயின் அளவு குறைந்துள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என்று தேசிய மசாலாப் பொருட்கள் விற்பனைச் சபை தெரிவித்துள்ளது.


பதப்படுத்தப்பட்ட ஒரு கிலோ கிராம் ஏலக்காக்கு சுமார் ஆறு கிலோ கிராம் பச்சை ஏலக்காய் தேவைப்படுவதுடன், சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை ஏலக்காயின் விலை தற்போது 7,000 – 8,000 ரூபாய் வரை உள்ளது.


மேலும், இலங்கையில் வருடாந்தம் சுமார் 33 மெற்றிக் டொன் ஏலக்காய் பயன்படுத்தப்படுகின்றது.


அதனால், உற்பத்தி குறைந்துள்ளதால், ஏலக்காய் உற்பத்திக்கு அதிக மதிப்பும் கேள்வியும் ஏற்பட்டுள்ளதாக ஏலக்காய் பயிரிடுவோர் கூறுகின்றனர்.

No comments

Powered by Blogger.