மின் கட்டணத்தை 15% அதிகரிப்பது மக்கள் ஆணையை காட்டிக் கொடுக்கும் துரோகம்
மின் கட்டணத்தை 15% அதிகரிப்பது மக்கள் ஆணையை காட்டிக் கொடுக்கும் செயலாகும். துரோகமுமாகும். ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மின்சாரக் கட்டணத்தை ரூ.9000 இல் இருந்து ரூ.6000 ஆகவும், ரூ.3000 கட்டணத்தை ரூ.2000 ஆகவும் குறைப்போம் என்றார். மின்சார கட்டணத்தை 33% ஆல் குறைப்போம் என்றும் மேடைக்கு மேடை பிரஸ்தாபித்தார். பின்னர், பொதுத் தேர்தலில் அக்கட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஈட்டி 159 ஆசனங்களை தனதாக்கிய சந்தர்ப்பத்திலும் கூட மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைத்திருக்க வேண்டும்.
ஆனால் அது நடக்கவில்லை. நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறி, ஜனாதிபதியே தான் வெளியிட்ட அறிக்கைகளை பொய்களாக மாற்றும் வகையில், மின்சாரக் கட்டணத்தை 15% ஆல் அதிகரிக்க தற்போது இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கை, இந்த நாட்டின் மின்சார நுகர்வோரின் உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாக அமைந்து காணப்படுகின்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று (11) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
Post a Comment