கண்டிக்கும் - பேராதனைக்கும் இடையிலான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் பாதையில் இன்று (11) விபத்து ஏற்படவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கண்டி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் பாரிய தாழிறக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. வேலைக்கு சென்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் இதனை அவதானித்து உடனடியாக ரயில் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
உடனடியாக செயற்பட்ட அதிகாரிகள் அந்த நேரத்தில் குறித்த தண்டவாளத்தின் ஊடாக வந்த ரயில் நிறுத்தி பயணிகளை காப்பாற்றியுள்ளனர். இதன் காரணமாக கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
Post a Comment