Header Ads



விலைக்கு வாங்க முடியாத ஸ்டாலின் மீது, கைவைத்த ரணிலின் பொலிஸ்


இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மீது கைவைத்திருக்கிறது ரணிலின் பொலிஸ்…

நாடாளுமன்றத்தில் வந்து அங்கே கொஞ்சம் ஆதரவு கிடைத்தால் போதும்.. ரணில் மறுநிமிடமே ஜே.ஆராக மாறிவிடுவார்..

ஆசிரியர் போராட்டம் குறித்த விமர்சனங்கள் இருந்தாலும், ஆசிரியர் சங்க செயலாளர் ஸ்டாலின் பல பேருக்கு தலைவலி கேஸ்.. அந்தாளை விலைக்கு வாங்க முடியாது, பிரச்சினையில் அரசியலை புகுத்தி வேலைகளை செய்யாத ஆள் என்று பல தனித்துவங்கள் கொண்ட ஒருவர்..

கடந்த அரசுக்கெதிராக வீதியில் இறங்கி போராடி , இந்த அரசு வந்தகையோடு ஜனாதிபதியின் தொழிற்சங்க இணைப்பாளர் என்றெல்லாம் பதவி வாங்காத மனுஷன்..

கைது நடக்குமென்று தெரிந்துதான் களத்தில் இருந்தார் ஸ்டாலின். ஆனால் அவரை கைது செய்தால் என்ன நடக்குமென்று தெரியாமல் கை வைத்திருக்கிறார் ரணில்.. இரவு , ஸ்டாலின் பிணையில் விடுதலை செய்யப்பட்டாலும் கைது என்ற பயத்தை ரணிலின் பொலிஸ் காட்டியிருக்கிறது..

ரணிலின் அரசாங்கத்தை ஆதரித்தோ அல்லது ரணிலை வாழ்த்தியோ உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது திருவாயால் இதுவரை எதையும் மலர்ந்தருளவில்லை.

வாழ்த்தெல்லாம் கடிதங்கள் , அறிக்கையோடு சரி..

ஜனாதிபதி பதவியேற்ற கையோடு  கோல்பேஸ் ஆர்ப்பாட்டத்தில் கைவைத்த ரணில் , இப்போது தொழிற்சங்கவாதிகளை அடக்க முனைகிறார்..

ஆசிரியர் தொழிற்சங்கம், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜாதிக சேவக சங்கமய என்று நினைத்துவிட்டார்போலும் ஐயா..

பாடமொன்றை கற்கப்போகிறார்.

- சிவா இராமசாமி -


1 comment:

  1. இந்த ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் பயங்கரவாதி "பிப்லேடனை" விட மோசமானவன். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் நாயகம் என்ற போர்வையில் அவர் செய்த அனைத்துக் குற்றங்களுக்காகவும் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த அலுவலகத்திற்கான தேர்தலை தனது கைக்கூலிகளை வைத்துக்கொண்டு தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த பதவியை வகித்து வருகிறார். மிக முக்கியமாக, அவரது சொத்துக்கள் மற்றும் சொத்துக்கள் விசாரிக்கப்பட வேண்டும். மகிந்தவும் கோட்டாபயவும் புலிகளின் பயங்கரவாதத் தலைவர்கள் மீது இரும்புக் கரத்தைப் பிரயோகித்த அதே வேளையில் இந்த "பயங்கரவாதி" விடயத்தில் மிகவும் மெத்தனமாக இருந்தனர். அந்த வட்டாரங்களில் தேடப்பட்டு கைது செய்யப்பட்டு "சட்டத்தின் ஆட்சி" முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள் அதிகம். குண்டர்களால் நாடு இனியும் பாதிக்கப்பட முடியாது.
    Noor Nizam - நூர் நிசாம் - அமைதி மற்றும் அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் தொடர்பாடல் ஆய்வாளர், SLFP/SLPP பிரமுகர், தேசப்பற்றுள்ள குடிமகன்.

    ReplyDelete

Powered by Blogger.