Header Ads



இலங்கைக்கு தொடர்ந்து சேவையாற்றுவேன் - கோட்டாபய


-சி.எல்.சிசில்-

இலங்கை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் தொடர்ந்தும் சேவையாற்றுவேன் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று -16 வாசிக்கப்பட்ட அவரது இராஜினாமா கடிதத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றம் கூடிய போது சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க வாசித்தார்.

அந்தக் கடிதத்தில், ஜனாதிபதியாக பதவியேற்ற 3 மாதங்களுக்குள் கொவிட் தொற்று உலகம் முழுவதையும் பாதித்துள்ளது.

அந்த நேரத்தில் இலங்கையை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து திருப்தியடைவதாக கோத்தபாய தெரிவித்தார்.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பொது முடக்கங்களை அமுல்படுத்தியதன் மூலம், நாடு அந்நியச் செலாவணியை இழந்ததாகவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

1 comment:

  1. ஆம், நீங்கள் கண்டிப்பாகத் திரும்பி வரவேண்டும்.இந்த நாட்டில் உள்ள உரிய அதிகாரிகள் அவசியமான ஆவணங்களைத் தயார்படுத்தி வழக்குகளைப் பதிவு செய்ய குறிப்பிட்ட காலக்கெடு தேவை.அதுவரையில் வௌியில் இருந்து திரும்பிவந்தால் நேரடியாக சிறையில் நுழைவிக்க ஏற்பாடுகள் பூர்த்தியாகும். அக்காலப்பிரிவில் நீங்கள் களவாடிய கோடான கோடி டொலர்களை திருப்பிப் பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.