Header Ads



சீனாவிடம் 4 பில்லியன் டொலர் கடன் பெற முயற்சி, பெற்ற கடனை திருப்பிச்செலுத்த ஒரு பில்லியன் டொலர்


நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.

‘ப்ளும்பர்க்’ இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய செவ்வி ஒன்றின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் கடனானது மிக விரைவில் கிடைக்கப்பெறும் என தாம் நம்புவதாகவும் பாலித கொஹொன குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனை திருப்பி செலுத்த ஒரு பில்லியன் டொலரும், 1.5 பில்லியன் பெறுமதியான கடன் பரிமாற்ற வசதி மற்றும் சீனாவிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்காக 1.5 பில்லியன் ரூபா கடன் எல்லை வசதி என இலங்கையினால் சீனாவிடம் கடனுதவி கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.