இலங்கை தேசம் அழிவைத் தவிர்க்க வேண்டுமெனில்...?
சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர, தனது X கணக்கில் பதிவு ஒன்றை இட்டு, இலங்கையின் நிலைத்தன்மைக்கு உறுதியான மற்றும் உள்ளார்ந்த வலுவான பொருளாதார மாதிரி அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தேசம் அழிவைத் தவிர்க்க வேண்டுமெனில், தொழில்துறைகளில் போட்டித்தன்மையை அடையாளம் கண்டு, மேற்கத்திய உதவிகளை நம்பியிருக்கும் மனநிலையிலிருந்து விடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வஜன அதிகாரத்தினால் முன்வைக்கப்பட்ட "இலங்கையின் மூலோபாய திட்டம்" வரைவில் குறிப்பிடப்பட்ட மூலோபாய முறைகளை அரசாங்கம் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று திலித் ஜயவீர பணிவுடன் முன்மொழிந்துள்ளார்.
மேலும், அவர் தனது X பதிவில், "இலங்கையின் மூலோபாய திட்டத்தின் மையக் கருத்தான 'தொழில்முனைவு அரசாங்கம்' என்ற கருத்தாக்கத்தை அரசாங்கம் பரிசீலிக்க இது முக்கியமான தருணமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment